தமிழகம், புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழகத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடக்கிறது. மாநிலம் முழுதும், 108 மையங்களில் தேர்வு தொடங்கியுள்ளது.
தமிழ் தேர்வு இன்று நடக்கிறது. ஏப். 2இல் ஆங்கிலம், 4இல், விருப்ப மொழிப்பாடம், 7இல் கணிதம், 11இல் அறிவியல், 15இல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
12,487 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 46 ஆயிரத்து 471 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 499 மாணவிகளும், 25 ஆயிரத்து 841 தனித்தேர்வர்கள் மற்றும் 273 சிறைவாசித் தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு எழுத வந்த மாணவியருக்கு, தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.