தந்தை பெரியார் 
செய்திகள்

பெரியார் பெயருக்கு பின்னால் சாதி பெயர்... சர்ச்சையைக் கிளப்பிய யுபிஎஸ்சி வினாத்தாள்!

Staff Writer

யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் சேர்க்கப்பட்டு கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணிகளுக்காக ஆண்டுதோறும் மத்திய தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வுகள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான முதல்நிலைத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இந்த யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் போடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற ஒரு கேள்வியில், ‘சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?’ என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பதில் பகுதியில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

யுபிஎஸ்சி வினாத்தாள்

பெயருக்கு பின்னால் சாதியின் பெயர் இருக்கக்கூடாது எனக்கூறிய பெரியாரின் பெயருக்கு பின்னாலேயே சாதி பெயர் போடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.