அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாக்காளர் அதிகார நடைபயணத்தை பிகாரிலிந்து இன்று தொடங்கினார்.
நிகழ்வுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், “ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் பல தியாகங்களைச் செய்துள்ளோம். எதிர்காலத்திலும் நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். எங்கள் வாக்குரிமையை நாங்கள் அழிக்க விடமாட்டோம். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இது அவசரநிலையின் போது இருந்ததை விட மோசமானது. ராகுல் காந்தியும் எங்களுடன் இருப்பது நல்லது" என்று கூறினார்.
பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "ஒவ்வொரு பிகாரியும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த யாத்திரையை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்