நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 12ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.
இதற்கிடையே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகா நடிகை’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் 12ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘ககன மார்கன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்குகிறார். பான் இந்திய திரைப்படமாக இது உருவாகிறது.