பல்லடம் அரசுப் பள்ளி 
செய்திகள்

அரசுப் பள்ளியில் மனிதக் கழிவு வீசப்பட்ட விவகாரம்… காவல் துறை தீவிர விசாரணை!

Staff Writer

அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு அறையில் மனித கழிவை மர்ம நபர்கள் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.