அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக கடும் சர்ச்சைக்கு உள்ளான சுகாதார அதிகாரி அந்தோணியா பௌசிக்கான பாதுகாப்பை டிரம்ப் நிர்வாகம் விலக்கிக்கொண்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின்போது, அமெரிக்காவில் தேசிய ஒவ்வாமை நோய்கள், தொற்றுநோய்கள் நிறுவனத்தின் தலைவராக அந்தோணி பௌசி இருந்தார். அப்போது, கொரோனா தடுப்பூசியை விநியோக்கும் பணியை முடுக்கிவிட்டு பல நாடுகளுக்கும் வழிகாட்டியாகவும் இருந்தார்.
அப்போது அவருக்கு தேசிய சுகாதார நிறுவனம் பாதுகாப்பை வழங்கிவந்தது.