அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கான சுமார் ரூ.18,870 கோடி நிதியை அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தியுள்ளார்.
ஹார்டுவர்டு பல்கலைக்கழக மாணவர்கள் உலக மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது. எனினும், அதை ஏற்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனால், கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கான 2.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி சுமார் ரூ. 18,870 கோடி) மானியங்களை நிறுத்தியுள்ளார். மேலும், 60 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ. 514 கோடி ரூபாய்) ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களும் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.