டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே நடைபெற்ற வாக்குவாதம் 
செய்திகள்

அமெரிக்காவிடம் அடிபணிந்த உக்ரைன் - டிரம்புக்கு செலன்ஸ்கி கடிதம்!

Staff Writer

இரசிய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் திடீர்த் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் தலைமையில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பணியாற்றத் தயார் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

தனக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அனுப்பிய கடிதத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவர எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் பேச்சுவார்த்தைக்கு வரத் தாங்கள் தயார் என்றும் வேறு யாரையும்விட இந்தப் போரை முடித்து, அமைதியைக் கொண்டுவருவதில் உக்ரைனியர்கள் அதிக விருப்பமாக உள்ளனர் என்றும்

டிரம்பின் உறுதியான தலைமையில் தாங்கள் அமைதிக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மைக்காக அமெரிக்கா எவ்வளவு செய்திருக்கிறது என்பதை உணர்வதாகவும் கனிமவளங்கள், பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் எப்போதென்றாலும் கையெழுத்திடத் தயார் என்றும் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். 

சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து, செலன்ஸ்கியை விருந்தினர் என்றும் பாராமால் டிரம்ப் அவமரியாதையுடன் பேசியதையடுத்து, உக்ரைன் குழுவினர் அங்கிருந்து மதிய உணவு உண்ணாமலே வெளியேறினர். அதையடுத்து ஐரோப்பிய தலைவர்களுடன் செலன்ஸ்கி பேச்சு நடத்தியநிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.