துணைமுதலமைச்சர் உதயநிதி 
செய்திகள்

‘உதயநிதி சில நாள்கள் ஓய்வில் இருப்பார்’ – விமர்சிக்கப்படும் அறிவிப்பு!

Staff Writer

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இந்த அறிவிப்பில் கழக இளைஞர் அணி செயலாளர், கழக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு என்ற வரிகள் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது. இது திமுக வெளியிட்ட அறிவிப்பா அல்லது செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.