நடிகை த்ரிஷா 
செய்திகள்

'அடையாளமற்ற கோழைகள்…’ த்ரிஷா காட்டம்! – என்ன காரணம்?

Staff Writer

தன் மீது அவதூறு பரப்புவர்களை அடையாளமற்ற கோழைகள் என நடிகை த்ரிஷா விமர்சித்துள்ளார்.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியான இடத்தை தக்கவைத்துள்ளார்.

41 வயதிலும் த்ரிஷா இளமையுடன் இருப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இருந்தாலும் த்ரிஷா மீது அடிக்கடி தேவையற்ற வதந்திகளும் அவதூறுகளும் அவ்வபோது சமூக ஊடகங்களில் பிற நடிகைகளின் ரசிகர்களால் முன்வைக்கப்படுகின்றன.

தற்போது, குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா தேவையில்லை, ஏன் நடிக்க வேண்டும்? ஏன் புரமோஷன் செய்யவில்லை? என இப்படி தொடர்ச்சியாக விமர்சனங்கள் திட்டமிட்டே முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா கூறியதாவது:

ஷப்பா.... டாக்சிக்கான மக்களே எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்? நிம்மதியாக தூங்குகிறீர்களா? சமூக ஊடகத்தில் இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி மோசமான கருத்துகளை தெரிவிப்பதுதான் உங்களது நாளை நன்றாக்குகிறதா?

உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நினைத்தால் மிகவும் வேதனையளிக்கிறது.

பெயரில்லாத, அடையாளமில்லா நீங்கள் நிச்சயமாக கோழைகளே! உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கட்டும்!” எனக் கூறியுள்ளார்.