சட்டத்தை மீறியதாக கண்டறியப்பட்ட 6000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
அந்தவகையில், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 6000 விசாக்களில் 4000 விசாக்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள் ஈடுபட்டது போன்ற காரணங்களுக்காகவும், 200- 300 விசாக்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.