இயக்குநர் பாலா மீது மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லெனின் பாரதி. இவர் இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க, ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.