துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
செய்திகள்

இந்தித் திணிப்புக்கு எதிரான போரில் வென்று காட்டுவோம் – உதயநிதி

Staff Writer

தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாக தொடர்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆதிக்க சக்திகளின் இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் முதலமைச்சர் என நம் தலைவர்கள் தலைமையில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம்.

இது வெறும் மொழிப் போராட்டமாக மட்டுமல்லாமல்; தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாகவும் தொடர்கிறது.

நூற்றாண்டு காணபோகும் இந்தித் திணிப்புக்கு எதிரான இந்தப் போரில் மக்கள் ஆதரவோடும், சட்டத்தின் துணைக்கொண்டும் நம் கழகத்தலைவர்,முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வென்று காட்டுவோம். என தெரிவித்துள்ளார்