போப் பிரான்சிஸ் 
செய்திகள்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு எப்போது? தமிழக அரசு சார்பில் யார் கலந்து கொள்கிறார்கள்?

Staff Writer

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் -26) நடைபெறும் என வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88) இத்தாலியின் வாட்டிகனில் நேற்று காலமானார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்கான தேதியை கார்டினல்கள் அறிவித்தனர். அவரது இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திறந்த சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ் உடல் இருக்கும் புகைப்படம், வீடியோவை வாடிகன் வெளியிட்டது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை அணிவிக்கப் பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.