நடிகர் சிவகார்த்திகேயன் 
செய்திகள்

எஸ்.கே.வின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்…? வெளியான முக்கிய அப்டேட்!

Staff Writer

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உருவெடுத்ததிலிருந்து கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் அடுத்தடுத்து மதராஸி, பராசக்தி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இதில், பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.

இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் குட் நைட் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.