பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் 
உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்- 11 பேர் சுட்டுக்கொலை!

Staff Writer

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 11 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த ஜாயிண்ட் அவாமி ஆக்‌ஷன் கமிட்டி எனும் அமைப்பிற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முதல் போராட்டம் நடந்துவருகிறது. போராட்டம் இன்று தீவிரமடைந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியாகினர் என முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுவரும் நிலையில், போராட்டமும் தொடர்ந்துவருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.