கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 இந்தியர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
கத்தாரின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள எல்.என்.ஜி. நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; 66 பேர் காயமடைந்துள்ளனர்.
கத்தாரின் தினசரி மின்உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த ஆலை பெரும் பங்காற்றி வருகிறது. கடந்த ஞாயிறன்று இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதில் இறந்த 12 இந்தியர்களில் 3 பேர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல் விரைவில் தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் வெளியுறவுத் துறையின் உதவியுடன் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.