அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த கப்பல். 
உலகம்

அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் 3 இந்தியர்கள் பலி!

Staff Writer

ஹார்முஸ் நீரிணை அருகே இந்தியர்களை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியாகினர்.

மரிவெக்ஸ், செட்டபெல்லோ, ஜல்வீர் ஆகிய வணிகக் கப்பல்களின் மீது அமெரிக்கா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 3 இந்தியர்கள் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

மரிவெக்ஸ், ஜல்வீர் கப்பல்களில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர். ஆனால், செட்டபெல்லோ கப்பலில் இருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலால் கப்பல்கள் சேதமடைந்து தீப்பற்றி எரிந்தன.

கப்பலில் பயணம் செய்தவர்கள் முயற்சி செய்தும், அருகில் இருந்த துறைமுகங்களின் உதவியைப் பெற முடியவில்லை.

அமெரிக்காவின் கூற்றைப் பின்பற்றாததால் தான் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், செட்டபெல்லோ கப்பல் 10 நாள்களாக ஒரே இடத்தில் நிலையாக இருந்ததாகவும், அமெரிக்கக் கடற்படையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றும் கூறியது. மேலும், ஈரானிய எண்ணெய் அல்லது துறைமுகங்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அது மறுத்துள்ளது.

பதற்றமான இந்தச் சூழலில், கப்பலில் இருந்தவர்களால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கமுடியவில்லை. இதனால் ஒருவரின் உடல் அழுகிய நிலையிலும், சரியான நேரத்தில் உதவி கிடைக்காததால் உடல்நலம் குன்றியும் இந்தியர்கள் இறந்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram