பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் பயணிகள் பேருந்து ஒன்று டானா சார் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்ததாகவும், வழியில் பழுதடைந்த மற்றொரு பேருந்தில் இருந்த சிலரையும் ஏற்றிச் சென்றதால் பேருந்தில் பயணிகள் மிகுந்த நெரிசலுடன் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பலுசிஸ்தான் முதலமைச்சர் உட்பட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.