அமெரிக்க- இசுரேல் கூட்டுப் படைகளால் ஈரான் நாட்டில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தெற்கு ஈரான் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
தலைநகர் டெகரானில் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் ஈரானின் மற்ற பகுதிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதில், தெற்கு ஈரானின் மினாப் நகரில் தொடக்கப்பள்ளி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதில் பத்துக் கணக்கில் அந்த இடத்திலேயே குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அந்நாட்டின் அரச தலைமை குரு அயதுல்லா கொமேனியின் அலுவலகப் பகுதிகளைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அவர் அண்மைய சில நாள்களின் அசாதாரண நிலவரங்களை முன்னிட்டு, பாதுகாப்பாக நிலவறைக்குள் சென்று விட்டார் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.