மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன 
உலகம்

116 பேர் சென்ற படகு விபத்தில் 67 பேர் மீட்பு... மற்றவர்களின் கதி?

Staff Writer

தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் 116 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கயானாவின் தலைநகரான ஜார்ஜ்டவுனிலிருந்து போர்ட் கைடுமா நோக்கி 116 பயணியர், 17 ஊழியர்களுடன் எம்.வி. பரிமா என்ற படகு சென்று கொண்டிருந்தது.

அயன் பண்ட் என்ற பகுதியில் அந்தப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதையடுத்து கடலோர காவல்படை, ராணுவ ஹெலிகாப்டர்கள், தனியார் படகுகள் உதவியுடன் இதுவரை 67 பேர் உயிருடன் பத்திரமாக மீட்டகப்பட்டுள்ளனர்.

கடலில் உருவான ராட்சத அலை, படகைத் தாக்கியதால் படகு கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததும் நிலைதடுமாறிய பயணிகள் நீரில் விழுந்துள்ளனர்.

படகில் பயணம் செய்த அனைவரும், கடலில் மூழ்கிய நிலையில், தகவலறிந்து உடனடியாக சென்ற மீட்புக் குழுவினர், 67 பேரை மீட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram