சாம் நீல் Richard Shotwell
உலகம்

'ஜுராசிக் பார்க்' நாயகன் சாம் நீல் காலமானார்!

Staff Writer

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த 'ஜுராசிக் பார்க்'  திரைப்படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நியூசிலாந்து நடிகர் சாம் நீல். இவர் தனது 78ஆவது வயதில் இன்று காலமானார்.

அண்மையில் ரத்தப் புற்றுநோயிலிருந்து இவர் குணமடைந்ததாக அறிவித்திருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான 'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சாம் நீல், 'தி பியானோ', 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர் ', 'பீக்கி பிளைண்டர்ஸ்' முதலிய பல திரைப்படங்கள், தொடர்களில் நடித்துள்ளார்.

தனக்கே உரிய சிறப்பான நடிப்புத் திறனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், திரைப்படப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram