ஆந்த்ரோபிக் ஏஐ  
உலகம்

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வளரும் ஏஐ தொழில்நுட்பம்!

ம.தினோவிகா

ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின கட்டுப்பாட்டை மீறி வேகமாக வளர்வதாக ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்துவரும் நிலையில், சர்வதேச அமைதி, பாதுகாப்பில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது.

அப்போது, பேசிய ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாரியா அமோடெய் கூறியதாவது:

"ஏஐ பயன்பாட்டை பொறுத்தவரையில், இரண்டு ஆபத்துகள் உள்ளன. ஒன்று ஏஐயை தவறாகப் பயன்படுத்துவது, மற்றொன்று ஏஐயை உருவாக்குபவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஏஐ வேகமாக வளர்வது ஆகும்.

ஏஐ தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால், மொத்த மனிதகுலத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே, ஏஐ நிறுவனங்கள் வெளியிடும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." என்று ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஓபன் ஏஐ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியதாவது, "மனிதர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளையும், படைப்பாற்றலையும் வழங்கும் ஏஐ, மிகப்பெரிய குழப்பத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் தொழில்நுட்பமாகவும் மாறலாம்.

எனவே, ஏஐ தொடர்பான மிக முக்கிய முடிவுகளை, ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டும் எடுக்கக்கூடாது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும்." என்று சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram