அமேசான் சரக்கு விமான விபத்து 
உலகம்

அமேசான் சரக்கு விமான விபத்தில் 5 பேர் பலி!

Staff Writer

அமெரிக்காவின் மியாமி நகரில் அமேசான் சரக்கு விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமேசானின் போயிங் 767-300 ரக சரக்கு விமானம் போர்ட்டோரிகோவின் சான் ஜூவான் நகரிலிருந்து, மியாமி சர்வேதச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றது. அப்போது விமானத்திற்கு அருகில் இருந்த விமானங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்தது.

இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது, மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும், தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram