அமெரிக்க அதிபர் டிரம்ப் 
உலகம்

எப்புட்ரா... இந்தியாவைப் பாராட்டிய டிரம்ப்!

Staff Writer

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் தேர்தல் முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூகஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்து:

“இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் என்னிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்காவின் அரசு நிர்வாக நடைமுறைகளை பற்றி கேட்டறிந்தார்.

பின்னர், அமெரிக்காவில் முறையான ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல் நீங்கள் எப்படி தேர்தல் நடத்துகிறீர்கள்? எனக் கேட்டார்.

இந்தியாவில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில், 64.60 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவானோர் மட்டுமே தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.

தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும், முறையான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருந்தனர்.

அதுபோன்ற ஒரு நடைமுறையை கொண்டுவர சேவ் அமெரிக்கா சட்டத்தை நாமும் நிறைவேற்ற வேண்டும்." என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram