இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.
மேற்கத்திய நாடான ஈரான் மீது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஈரானின் உச்ச தலைவரான அலி கமேனி கொல்லப்பட்டார்.
கமெனி மட்டுமின்றி ஈரானின் ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
இந்தசூழலில் ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
இந்நிலையில் ஈரானிய புரட்சிகர காவல்படை என்று அழைக்கப்படும் ஐஆர்ஜிசி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் குறித்து தாக்கப்பட்டது. அவரது அலுவலகம் மட்டுமின்றி விமானப்படை தளபதியின் இருப்பிடமும் கெய்பர் ஷெகான் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா… தற்போது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என கூறியுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்புக்கு இதுவரை இஸ்ரேல் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.