டீன் சேட் ஜிபிடி அறிமுகம் 
உலகம்

17 வயதுக்கு உட்பட்டோருக்கு தனி சாட் ஜிபிடி அறிமுகம்!

Staff Writer

அனைத்து வயதினரிடமும் ஏஐ பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பதின்ம வயதினரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு 'சாட் ஜிபிடி ஃபார் டீன்ஸ்' என்பதைப் புதிதாக ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் 13 முதல் 17 வயதுடைய பதின்ம வயதினருக்கு தற்கொலை, சுயதீங்கு உட்பட்ட ஆபத்தான தலைப்புகள் தொடர்பான உரையாடல்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்கள் வீட்டுப்பாடங்களுக்கு ஏஐ உதவியுடன் நேரடியாக பதிலைப் பெற்றுக்கொள்வதைவிட, படிப்படியாக சிந்தித்து பதிலைக் கண்டுபிடிக்க உதவும் 'ஸ்டடி மோடு' போன்ற கல்வி சார்ந்த வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட நேரங்களில் சாட்ஜிபிடியின் பயன்பாட்டைப் பெற்றோர்கள் தடுக்க உதவும் வகையிலும், சில பாதுகாப்பு அபாயங்கள் கண்டறியப்பட்டால் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 13 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 72% பேர் ஒருமுறையாவது ஏஐயைத் தனக்கு துணையாகப்  பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram