கிரெட் நிறுவனர் குணால் ஷா 
உலகம்

வாட்சாப்பின் புதிய சி.இ.ஓ. கிரெட் நிறுவனர் குணால் ஷா !

Staff Writer

வாட்சாப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் குணால் ஷாவை நியமித்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலில் கிரெடிட் கார்டு தொடர்பான சேவைகளுக்காக 2018இல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் கிரெட். ஆனால், தற்போது ஏராளமான நிதி தொடர்பான சேவைகளை இந்நிறுவனம் செய்துவருகிறது. இந்தியாவின் 40% கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை இந்த நிறுவனம் கையாள்கிறது.

மெட்டா நிறுவனம் கிரெட்டில் ரூ.8,550 கோடி முதலீடு செய்து அந்நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷாவை வாட்சாப்பின் புதிய தலைவராக அதிகாரபூர்வமாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நியமனம் குறித்து மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், “குணால் ஷா வாட்சாப்பின் அடுத்த தலைவராக பொறுப்பேற்பதன் மூலமாக மெட்டா நிறுவனத்தில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான கிரெட்டின் நிறுவனர் குணால் ஷா. உலக அளவில் பரவலாக மெசேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் வாட்ஸாப் செயலியை இயக்குவதற்குத் தேவையான திறனும், உலகளாவிய பார்வையும் அவரிடம் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram