ஏலத்தில் விற்பனையான டைனோசர் எலும்புக்கூடு 
உலகம்

ரூ.482 கோடிக்கு ஏலம்போன டைனோசர் எலும்புக்கூடு!

Staff Writer

உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடப்பட்டதில் ரூ. 482 கோடிக்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 'டி - ரெக்ஸ்' என்ற வகையான இந்த டைனோசர் அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதற்கு 'கஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டைனோசர் 38 அடி நீளமும் 12.5 அடி உயரமும் கொண்டது.

அமெரிக்காவின் சவுத் டகோட்டாவில் உள்ள நிலத்தில் 2021ஆம் ஆண்டு இந்தப் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதைத் தோண்டி எடுக்க 3 ஆண்டுகள் ஆனது.

மேலும், நிலத்தில் இருந்து எடுத்த பாகங்களை ஒன்றிணைக்க 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக ஆய்வாளர்கள் கூறினர்.

எலுப்புக்கூட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முழுமையாக கிடைத்துள்ளதால், ஏலத்தில் பல கோடிக்கு இது விற்பனையாகி உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதைபடிவங்களில் மிகவும் அரிதாகவே சிதைவின்றி காணப்படும் 30 வயிற்று விலா எலும்புகள் இதில் கிடைத்துள்ளன.

இதற்கு முன்னர் உலகின் மிகப் பழமையான 'ஸ்டெகோசொரஸ்' டைனோசர் எலும்புக்கூடு அதிக விலைக்கு விற்கப்பட்டது.

இது 2024 ஜூலையில் நியூயார்க்கில் உள்ள சோத்பிஸ் நிறுவனத்தால் ரூ.373 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

அந்த சாதனையை தற்போது கஸ் டைனோசரின் எலும்புக்கூடு முறியடித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram