கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் 
உலகம்

பயங்கர நிலநடுக்கம்... கொலம்பியாவில் சீட்டுக்கட்டுகள் போல சரிந்த கட்டடங்கள்!

Staff Writer

கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 132 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம், ரிக்டர்  அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.

இதுவரை 1,575 வீடுகள், 18 சுகாதார மையங்கள், 52 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாகவும், நிலநடுக்கத்திற்குப் பிறகு 21 முறை நிலஅதிர்வை உணர்ந்ததாகவும் கொலம்பியாவின் குடியரசுத் தலைவர் எஸ்பிரியெல்லா குறிப்பிட்டார்.

இதில் 132 பேர் பலியாகியுள்ள நிலையில், 570 பேர் காயமடைந்துள்ளனர். பேரிடர் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

கொலம்பியாவின் பெரேரா பகுதியில் உள்ள ஒரு நான்குமாடிக் கட்டடம் சீட்டுக்கட்டுகள் போல சரிந்துவிழுவது போன்ற காணொலியும், மனிசாலெஸ்ஸில் உள்ள நகரின் சின்னமான நியோ-கோதிக் பேராலயத்தின் கோபுரங்கள் இடிந்துவிழும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

மேலும், நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொலம்பியாவின் புவியியல் சேவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram