பதவியிலிருந்து நீக்கப்பட்ட சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத், அவரது தம்பி மஹர் அசாத் ஆகியோருக்கு சிரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும் அந்நாட்டின் தெற்கு மாகாணமான தாராவில் அடக்குமுறையை வழிநடத்திய அசாத்தின் உறவினரான அதெஃப் நஜிப் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
.
சிரிய ராணுவத்தின் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல், தாரா மாகாணத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் போன்ற உயரிய அதிகாரியாக நஜிப் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவை 1971 முதல் ஆட்சி செய்து வந்த தனது தந்தை ஹபீஸ் அல் அசாத்தின் மறைவுக்குப் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு, பஷார் அல் அசாத் போட்டியின்றி ஜனாதிபதியானார்.
அங்கு 2011ஆம் ஆண்டு தொடங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களைத் தொடர்ந்து, பல்வேறு அடக்குமுறைகளை அசாத் கொண்டு வந்தார்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று சிரியாவில் உள்ள டமாஸ்க்ஸ் புறநகர்ப் பகுதியில் நரம்புகளை பாதிப்படையச் செய்யும் சாரின் நரம்பு வாயுக்களை தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக ஐ.நா. உறுதி செய்தது.
இதில், மூச்சுத்திணறல் காரணமாக ஒரே நாளில் 1,144 பேர் உயிரிழந்ததாக இந்த அமைப்பு பதிவு செய்துள்ளது.
மேலும், தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே 6,000 பேர் கடுமையான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைதொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸூக்குள் நுழைந்ததையடுத்து, 2014ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அசாத், அவரது தம்பி மஹர் அசாத் ஆகியோர் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றனர்.