வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி. 
உலகம்

அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Staff Writer

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் ‘ஜெ’ பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டி சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரியா அணி முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் கோல் அடித்த ஜோர்டான் அணி, போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது.

ஜோர்டான் அணியின் வீரர் யாசன் அல்-அரப் 'செல்ஃப் கோல்' அடிக்க நேர்ந்ததால், 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரியா அணி மீண்டும் முன்னிலை பெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், போட்டியின் இறுதி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஆஸ்திரியா அணி கோல் அடித்தது. இதனால், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரியா அணி, ஜோர்டான் அணியை வீழ்த்தி வென்றது.

அடுத்ததாக 'கே' பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில், போர்ச்சுகல், காங்கோ அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி டிராவில் முடிந்தது.

'எல்' பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில், இங்கிலாந்து, குரோஷியா அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்தன.

பரபரப்பாக நடைபெற்ற இரண்டாம் பாதியில், இங்கிலாந்து அணி இரண்டு கோல்களை அடித்தது. இதனால், 4-2 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

'எல்' பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில், கானா, பனாமா அணிகள் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தின் முடிவிலும் 0-0 என்ற புள்ளிக்கணக்கு நீடித்ததால் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்த பனாமா அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்றது.

'கே' பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் உஸ்பெகிஸ்தான், கொலம்பியா அணிகள் விளையாடின.

போட்டியின் முடிவு வரை 1-1 என்ற புள்ளிக்கணக்கு நீடித்தது. இதனால், போட்டி விறுவிறுப்பானது. போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணிவீரர் டயாஸ் கோல் அடித்தார். அத்துடன் கூடுதல் நேரத்தையும் கொலம்பியா அணி சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தது. இதனால், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தி, கொலம்பியா அணி போட்டியை வென்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram