நார்வே அணி 
உலகம்

நாக் அவுட் போட்டிகளுக்குள் நுழைந்த நார்வே!

Staff Writer

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் திங்களன்று 'ஐ' பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பிரான்ஸ், ஈராக் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் ஈராக் அணியை வென்றது.

அடுத்து 'ஐ' பிரிவில் உள்ள நார்வே, செனகல் அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் நார்வே அணி 2 கோல்களும், செனகல் அணி ஒரு கோலும் அடித்திருந்தன.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் போட்டி விறுவிறுப்பானது. எனினும், அதன்பிறகு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், நார்வே அணி 3-2 என்ற புள்ளிக்கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி போட்டியை வென்று அடுத்த கட்ட நகர்வை உறுதி செய்தது.

அடுத்ததாக 'ஜெ' பிரிவில் உள்ள ஜோர்டன், அல்ஜீரியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில், 1-2 என்ற புள்ளிக்கணக்கில் அல்ஜீரியா அணி, ஜோர்டன் அணியை வீழ்த்தியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram