உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி 
உலகம்

ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே வரலாற்றுச் சாதனை!

Staff Writer

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் 32-அணிகளுக்கான நாக்அவுட் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், நேற்று இரவு 10:30 மணிக்கு பிரேசில் – ஜப்பான் அணிகள் மோதின. ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, ஜப்பானுக்கு எதிராக கடுமையாகப் போராடி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

முன்னாள் சாம்பியனான ஜெர்மனியை, பராகுவே அணி எதிர்கொண்டது. போட்டியின் இறுதிவரை 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் இருந்தன.

பிறகு நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் பராகுவே, ஜெர்மனியை வீழ்த்தியது.

இதன் மூலம் உலகக் கோப்பையின் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றியை பராகுவே பதிவு செய்து, ஜெர்மனி அணியைத் தொடரிலிருந்து வெளியேற்றியது.

நெதர்லாந்து–மொராக்கோ போட்டி 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ 3-2 என்ற கணக்கில் வென்று ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறியது.

கூடுதல் நேரத்தின் இறுதியில் கோல் அடித்த மொராக்கோ அணி, பெனால்டியில் நிதானமாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram