உலகக் கோப்பை கால்பந்து போட்டி 
உலகம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி... ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

Staff Writer

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நேற்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் விறுவிறுப்பாக அமைந்தன. பிரான்ஸ், நார்வே, மெக்சிகோ அணிகள் வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நார்வே, ஐவரி கோஸ்ட் அணிகள் மோதியதில் நார்வே அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில் அடித்த கோல் நார்வே அணிக்கு வெற்றியை உறுதி செய்தது. கடுமையாக போராடிய ஐவரி கோஸ்ட் அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

பிரான்ஸ், ஸ்வீடன் அணிகள் மோதியப் போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்து அசத்த, பிராட்லி பார்கோலா ஒரு கோல் சேர்த்தார். 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மெக்சிகோ, ஈக்வடார் அணிகளுக்கு இடையேயானப் போட்டியில் மெக்சிகோ அணி வென்றது. போட்டியில் மெக்சிகோ அணி 2-0  என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram