‘ஐ’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது நார்வே அணி. 
உலகம்

சாதனை செய்த பிரான்ஸ் அணியின் எம்பாப்பே!

Staff Writer

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஐ’ பிரிவு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பிரான்ஸ்-செனகல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே 2 கோல்களையும், பிராட்லி பார்கோலா ஒரு கோலையும் அடித்தனர். செனகல் அணியின் இப்ராஹிம் மபாயே ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று, செனகல் அணியை வீழ்த்தியது. எம்பாப்பே, இந்த இரு கோல்கள் மூலம் பிரான்சுக்காக அதிக கோல்கள் போட்ட வீரர் ஆனார். 58 கோல்கள் அவர் இதுவரை அடித்துள்ளார்.

போஸ்டனில் நடைபெற்ற ஈராக், நார்வே அணிகளுக்கு இடையிலான ‘ஐ’ பிரிவு போட்டியில் நார்வே அபார வெற்றி பெற்றது.

29-வது நிமிடத்தில் நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்த நிலையில், 39-வது நிமிடத்தில் ஈராக் அணியின் அய்மன் ஹுசைன் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டுவந்தார்.

43-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் தனது இரண்டாவது கோலை அடித்து, ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் நார்வே அணியை 2-1 புள்ளிக்கணக்கில் முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், நார்வே அணி 2 கோல்களை அடித்தது.

இதனால், போட்டியின் முடிவில் 4-1 என்ற கோல்கணக்கில் நார்வே அணி போட்டியை வென்றதுடன், ‘ஐ’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.

‘ஜெ’ பிரிவு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, அல்ஜீரியா அணியுடன் மோதியது.

போட்டியின் முதல் பாதியில் மெஸ்சியின் கோலால், அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது.

பின்னர் இரண்டாம் பாதியில், மெஸ்சி இரண்டு கோல்களை அடித்ததால், அர்ஜென்டினா அணி 3 புள்ளிகள் பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அல்ஜீரியா அணி கோல் அடிக்க போராடி வந்த நிலையில், கோல் அடிக்க முடியாமல் இரண்டாம் பாதி ஆட்டத்திலும் திணறியது.

போட்டியின் முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் அல்ஜீரியா அணியை வீழத்தியது.

இப்போட்டியில், 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram