பிரான்ஸ் அணி 
உலகம்

இப்படி ஒரு ஆட்டமா?...புதிய சாதனை படைத்துள்ள பிரான்ஸ் அணி!

Staff Writer

தொடர்ந்து 5 போட்டிகளில் மூன்றுக்கும் அதிகமான கோல்கள் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் பிரான்ஸ் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுபோன்ற சாதனைகள் நிகழ்வது இதுதான் முதல்முறை.

உலகக் கோப்பை போட்டியில் ஸ்வீடனை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியதன் மூலம் பிரான்ஸ் அணி புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 5 போட்டிகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை பிரான்ஸ் அணி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி

எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி, தனது பயங்கர ஆட்டத்தினால், எதிரணிகளை திணறடித்து வருகிறது. ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களும், பிராட்லி பார்கோலா ஒரு கோலும் அடித்து 3-0 வெற்றியை உறுதி செய்தனர்.

மேலும், உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 7 முறை ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாகவும் பிரான்ஸ் அணி சாதனைப் படைத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram