பிரக்ஞானந்தா wikipedia
உலகம்

நார்வே செஸ் - பிரக்ஞானந்தா வரலாற்று வெற்றி!

Staff Writer

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் தலைசிறந்த செஸ் வீரர்கள் போட்டியிடும் கடினமான போட்டியாக இது கருதப்படுகிறது. எந்த ஒரு இந்தியரும் செய்திராத சாதனையை பிரக்ஞானந்தா செய்துள்ளார். உலக சாம்பியனின் சொந்த நாட்டிலேயே அவரைத் தோற்கடித்து பிரக்ஞானந்தா இந்தியாவின் பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.

நார்வேயின் செஸ் ராஜாவாகக் கருதப்படும் மேக்னஸ் கார்ல்சனை, தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார். மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியனாகவும், ஏழு முறை நார்வேயின் சதுரங்க வெற்றியாளராகவும் இருந்துள்ளார்.

இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி மொத்த புள்ளிகளையும் பெற்று, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

நடப்பு உலக சாம்பியன் டி.குகேஷ், அண்மையில் நடைபெற்ற நார்வே செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்திருந்தார்.