அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானத்தைக் கொண்டுவந்த தாமஸ் மாஸ்ஸி  
உலகம்

அமெரிக்க அமைச்சர் பதவி தப்பியது!

Staff Writer

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தை பதவி நீக்கம் செய்யக் கோரிய தீர்மானம் ரத்தானதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தின் நடத்தை, ஈரானில் நடைபெற்று வரும் போரைக் கையாண்ட விதம் தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸ்ஸி தீர்மானத்தை கொண்டுவந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற, இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 211 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பீட் ஹெக்ஸெத்திற்கு ஆதரவாகவும், 204 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், தாமஸ் மாஸ்ஸி கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, பீட் ஹெக்ஸெத் மீதான பதவி நீக்க நடவடிக்கை முடக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மீது ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த பதவி நீக்க தீர்மானம் மிகவும் பரிதாபமாகத் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பீட் ஹெக்செத் சிறந்த அமெரிக்க தேசபக்தர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram