‘ஜாவலின்’ ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் 
உலகம்

அமெரிக்காவிடமிருந்து ‘ஜாவலின்’ ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம்!

Staff Writer

இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து ‘ஜாவலின்’ ரக டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தயாரிப்பான ‘ஜாவலின்’ ஏவுகணை, ஏற்கெனவே போர்க்களத்தில் சோதிக்கப்பட்டதாகும். தோளில் சுமந்து வீரர்கள் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, டேங்குகள், பிற கவச வாகனங்களைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

ஜாவலினின் முக்கிய சிறப்பம்சம் இலக்கை நோக்கி ஏவிய பிறகு, ஏவுகணையை வீரர் தொடர்ந்து வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஜாவலின் ஏவுகணைகளை இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்கும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram