ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 
உலகம்

இந்தியா நம்பகமான கூட்டாளி – ரஷிய அதிபர் புதின்

Staff Writer

உலக அளவிலான பதற்ற நிலை நீடித்துவரும் நிலையில் இந்தியாவுடனான நட்பை மாஸ்கோ வலுபடுத்தும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற உரையாடலில், இந்தியாவுடனான நட்பைப் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றியும் அதிபர் புதின் குறிப்பிட்டார்.

மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா ஒத்துழைத்துச் செல்வதால் ரஷ்யாவுடான நட்பில் பாதிப்பு இல்லை என்றார் அவர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டும் என்றும் புதின் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், "இன்று உலக நாடுகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது. இந்த பெரும் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் கடின உழைப்பே காரணம். ரஷ்யாவின் நட்பு இந்தியாவுடன் மேலும் விரிவடையும்." என்றும் ரஷிய அதிபர் புதின் கூறினார்.