லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி 
உலகம்

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்... இந்திய மகளிர் அணி தகுதி!

Staff Writer

வருகின்ற 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்று முறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் மகளிருக்கானப் பிரிவில் மொத்தம் 6 அணிகள் மட்டுமே பங்கேற்கும். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகியவை சிறந்த அணிகளாக தேர்வுசெய்யப்பட்டு, அவை நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள அணிகள் தரவரிசைப் பட்டியல், 2027இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் குவாலிபயர் சுற்றின் மூலம் நிர்ணயிக்கப்படும்.

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறாத போதிலும், ஐசிசியின் தகுதி விதிமுறைகள், கண்ட வாரியான சிறந்த அணிகள் தேர்ந்தெடுப்பில் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ள நிலையில், இந்திய மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram