இண்டிகோ 
உலகம்

சவுதி அரேபியாவுக்கு இண்டிகோ விமானசேவை திடீர் நிறுத்தம்!

Staff Writer

சவுதி அரேபியாவில்நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, அந்நாட்டின் சில பகுதிகளுக்கு விமானங்களை தற்காலிகமாக இயக்கப்போவதில்லை என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன்படி, வரும் 17ஆம் தேதிவரை ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா ஆகிய நகரங்களுக்கு விமானசேவை நிறுத்தப்படும் என்றும் முன்பதிவு செய்த பயணிகள் பயணத்துக்கு முன்னர் இண்டிகோவின் இணையதளத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கப் பின்னணியுடன் நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களுக்கு சவுதி ஆதரவு அளித்துவருகிறது என ஏமன், ஈரான் ஆதரவுபெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று சவுதியின் ரியாத் விமானநிலையத்துக்கு அருகில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அங்கு நிலைமை இன்னும் சுமூகமாகவில்லை. அடுத்த நாளான ஞாயிறன்றும் ஹௌதிகளின் தாக்குதல் தொடர்ந்தது.

இடையிடையே, ஹௌதிகளின் டிரோன்களை இடைமறித்து வீழ்த்தியுள்ளதாக சவுதி அரசுத் தரப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.