ஈரானால் ஏவப்பட்டபோது தென்பட்ட ஏவுகணை  
உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்...மேற்காசியாவில் பதற்றம்

Staff Writer

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால், மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, நேற்றிரவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இதனால், இஸ்ரேலின் பலப் பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சிக்கை சைரன்கள் ஒலித்தது.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் உடனடியாக வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன், காசா எல்லையை தற்காலிகமாக மூடியது.

இஸ்ரேல் லெபனானின் தலைநகரம் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்திருந்தது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதையொட்டி, ஈரான் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திலேயே அரங்கேறியுள்ளது.

இதனால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.