ஹார்மூஸ் நீரிணை 
உலகம்

நட்பு நாடுகளுக்கு ஹார்மூஸ் நீரிணையை திறந்த ஈரான்… இந்தியா அந்த பட்டியலில் உள்ளதா?

Staff Writer

வர்த்தக கப்பல் போக்குவரத்திற்காக ஹார்மூஸ் நீரிணையை பயன்படுத்த இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹார்மூஸ் நீரிணையை மூடியது ஈரான். இதனால் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்முதலுக்கு மேற்கு ஆசியா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிர்பர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், தற்போது நட்பு நாடுகளுக்கு மட்டும் நீரிணையை திறந்துள்ளது ஈரான்.

இது தொடர்பாக ஈரான் வெளியுறத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நட்பு நாடுகள் என நாங்கள் கருதும் சில நாடுகளை ஹார்மூஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதித்துள்ளோம். சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்து செல்ல நாங்கள் அனுமதித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.