திருமணத்தையும் உள்நாட்டு நுகர்வையும் அதிகரிக்க சீன அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று விடுமுறையின் போது மாணவர்களை காதலிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அதிக அளவில் குறைந்ததாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சுவான் தென்மேற்கு விமானப் போக்குவரத்து தொழிற்கல்லூரி கடந்த செவ்வாய் கிழமை (மார்ச்.17) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 'பூக்களை பாருங்கள்… காதலியுங்கள் என்பதே ஏப்ரல் 1 முதல் 6ஆம் தேதி வரையிலான விடுமுறையின் கருப்பொருள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை மாணவர்கள் தங்களுக்குள் உரையாடவும் உறவுகளை வளர்க்கவும் உதவும் என்பதால், அது திருமண உறவுகளை அதிகரிக்க செய்யலாம் என்றும் விடுமுறையில் மாணவர்கள் பயணம் செய்வதால் உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்கள்.