நடப்பு ஆண்டு பணிபுரியும் ஊழியர்களில், 2.5% பேரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏராளமான நிறுவனங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஐடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் , விற்பனை, கன்சல்டிங், கேமிங் உட்பட்ட பிரிவுகளில் பணிபுரியும் 2.5% பேரை நடப்பு ஆண்டில் பணிநீக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்புகள் ஊழியர்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
பணிநீக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படுவர்களுக்கு வேறு துறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்நிறுவனத்தில் பணிபுரியும் 67 – 70 வயதுடையவர்களை விருப்ப ஓய்வு எடுத்துக்கொள்ள அறிவுறித்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.