புதிய போப்பாண்டவராக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது. போப்பாண்டவரைத்தேர்வு செய்ய நடந்த கூட்டத்தின் இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கர்தினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். இதன் அடையாளமாக அங்குள்ள புகைக் கூண்டில் வெள்ளைப் புகை வெளியிடப்பட்டது. அதைக் கண்ட அங்கு குழுமியிருந்த ஏராளமான கத்தோலிக்கர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ராபர்ட் ப்ரெவோஸ்ட் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தவர். பெரு நாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டவர். இத்தாலியில் கார்தினலாக பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தவர்.
போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு ஆவது இதுவே முதல் முறை. புதிய போப் இனி பதினான்காம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார்.