வேதியியலுக்கான நோபல் பரிசு 
உலகம்

நூற்றாண்டுப் புதிரை உடைக்க வழிவகுத்தவர்களுக்கு வேதியியல் நோபல்!

ம.தினோவிகா

நடப்பு ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டில் இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பிரான்சின் ஹென்றி காகன், ஜப்பானின் கென்சோ சோய் ஆகிய இருவரும் நேரியல் அல்லாத விளைவுகள், தன்வினையூக்கம் ஆகிய கண்டுபிடிப்பிற்காக வேதியியலுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.

இவர்களின் கண்டுபிடிப்பு, பூமியில் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றியபோது, அவை எவ்வாறு ஒரே வடிவ மூலக்கூறுகளை மட்டும் தேர்ந்தெடுத்து இயங்கத் தொடங்கின என்ற நூற்றாண்டு கால வேதியியல் புதிரை உடைக்க வழிவகுத்துள்ளதாக வேதியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கேட்டலிஸ்டிக் சிஸ்டம்ஸ் எனப்படும் வினையூக்கி அமைப்புகள் நேரியல் அல்லாத நடத்தையை அதாவது லீனியரல்லாத நடத்தையை வெளிப்படுத்த முடியும் என்று ஹென்றி காகன் கண்டறிந்துள்ளார்.

நேரியல் அல்லாத நடத்தையை நடத்தையை வெளிப்படுத்த முடியும் - ஹென்றி காகன் கண்டுபிடிப்பு

சிக்கலான மூலக்கூறு இடைவினைகள் மூலம், மிகச்சிறிய எனான்சியோமெரிக் சமநிலையின்மையைக் கொண்ட ஒரு வினையூக்கிக் கலவையானது, முன்னர் சாத்தியம் என்று கருதப்பட்டதைவிட, விளைபொருளில் வியத்தகு அளவில் அதிக ஒளியியல் தூய்மையை (எனான்சியோமெரிக் மிகை) உருவாக்கும் விளைவைப் பெருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

கென்சோ சோய், ஒரு வேதியியல் வினையில் உருவாகும் விளைபொருளே, அந்த வினையைத் தூண்டும் கேட்டலிஸ்ட் எனப்படும் வினையூக்கியாகச் செயல்படுவதை கண்டுபிடித்தார்.

இதன் மூலம் மிகச் சிறிய அளவில் உருவாகும் மூலக்கூறுகூட, சுயமாகத் தன்னைப்போன்ற மூலக்கூறுகளை மட்டுமே தொடர்ந்து உற்பத்தி செய்து, மற்றொரு எதிர்மறையான கண்ணாடி பிம்பத்தை உருவாக விடாமல் தடுத்துவிடும்.

வினையில் உருவாகும் விளைபொருளே, அந்த வினையைத் தூண்டும் வினையூக்கியாகச் செயல்படும் - கென்சோ சோய்

உயிர் அல்லாத சாதாரண வேதியியல் பொருட்களிலிருந்து சுயமாக 100% ஒரே வடிவ மூலக்கூறுகளை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்ற வேதியியல் சோதனையை, முதன்முதலாக ஜப்பானின் கென்சோ சோய் கண்டறிந்துள்ளதால், வேதியியல் உலகில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது.

பக்கவிளைவுகள் இல்லாத தூய்மையான மருந்து மூலக்கூறுகளை மிக எளிதாகவும் திறம்படவும் தயாரிக்க இவர்களது கண்டுபிடிப்புகள் உதவி புரியும் என்று வேதியியலாளர்கள் கூறியுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram