2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.13) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
புத்தாக்கம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக அமெரிக்காவின் ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட், பிரிட்டனின் பிலிப் அகியோன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலமாக நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை அடையாளப்படுத்தியதற்காக ஜோயலுக்கும், பழைய கொள்கைகளை நீக்கி புதிய கொள்கைகள் மூலமாக நீடித்த வளர்ச்சி என்ற ஆய்வுக்காக மற்ற இருவருக்கும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.